IPL 2026: தோனிக்கு குழந்தை மனசு.. சர்பராஸ் கான் பேபியுடன் கொஞ்சி விளையாடிய தல
சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதத் தயாராகி வரும் நிலையில், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியின் புதிய வீரரான சர்பராஸ் கானின் மகனுடன் விளையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் உள்ள சிஎஸ்கே முகாமில் சர்பராஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு காணொளியில்,
தோனி ஒரு வயது குழந்தையுடன் குதூகலமாக விளையாடி கொண்டிருந்த வீடியோ பதிவானது. இந்த மனதை வருடும் காட்சி, ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்துள்ளது. தோனியின் இந்த அன்பான செயல் ஆன்லைனில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்தி
இன்னும் கருத்துக்கள் இல்லை.